Tuesday, July 23, 2019

School Morning Prayer Activities -24.07.2019

No comments :

School Morning Prayer Activities -24.07.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.07.19

திருக்குறள்

அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

விளக்கம்:

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

பழமொழி

Every  tide has it's ebb.

ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்
2. இயற்கை சமநிலை பேணிபாதுகாப்பேன். அதற்காக என் பங்களிப்பை செலுத்துவேன்.

பொன்மொழி

பேரழகின் அளவீடு உணரும் போது , உண்மையான கலையின் தத்துவம் வெளிப்படுகிறது....

----------- ரவிவர்மா

பொது அறிவு

1. இந்தியாவில் பருத்தி நெசவாலைகள் அதிகம் உள்ள மாநிலம் எது ?
மகாராஷ்டிரா.

2. இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன்(பால்பண்ணை மேம்பாட்டுத் திட்ட வடிவமைப்பாளர், இவரது சொந்த ஊர் கோழிக்கோடு, கேரளா)

English words & meanings

Hibiscus - evergreen shrub. Flower plant. செம்பருத்தி பூ.
1.பூவும் இலையும் அதிக மருத்துவ குணம் கொண்டவை
2. பெண்கள் கூந்தல் வளர உதவும்

Hamster - a wild nocturnal animal. வெள்ளெலி.
1. தனிமை விரும்பி. தன் சொந்த இனத்தோடு கூட வாழ விரும்பாது.
2. முன்னும் பின்னும் ஒரே வேகத்தில் ஓடக்கூடியது

ஆரோக்ய வாழ்வு

இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் வெண்டைக்காயில் உள்ளது.

Some important  abbreviations for students

STD - Subscriber Trunk Dialing ISD→International Subscriber Dialing

நீதிக்கதை

விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தாள் ஏழாம் வகுப்பு மீரா. தினமும் விளையாடப் போகும்போது, மரத்தடியில் வேப்பங்கொட்டைகளைச் சேகரித்துவந்து மஞ்சள் பையில் போட்டுக்கொண்டிருந்தாள்.
எதுக்கு இதைச் சேகரிக்கறே?” என்று அம்மா கேட்டபோது, ‘‘அப்புறம் சொல்றேன்’’ என்றாள்.

‘‘இலை, குச்சிகளை வெச்சே விதவிதமா கிராஃப்ட் செய்வா. அந்த மாதிரிதான் எதுக்காவது இருக்கும்’’ என்றார் அப்பா. அதற்குப் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் மீரா.

ஒரு வாரம் கழித்து சென்னைக்குப் புறப்பட்டபோது, ‘‘அப்பா, சென்னைக்குப் பக்கத்துல போனதும் நான் சொல்ற இடத்துல எல்லாம் காரை நிறுத்தணும். அங்கேயெல்லாம் பாதை ஓரமா இந்த வேப்பங்கொட்டைகளைப் போடப்போறேன். நூறு போட்டா பத்தாவது முளைக்குமில்லே. இதுல கிராஃப்ட் செஞ்சா வீட்டுக்கு மட்டும்தான் அழகு. விதைச்சா ஊருக்கே அழகு’’ என்றாள்.

அப்பாவும் அம்மாவும் மீராவை அணைத்துக்கொண்டனர்.
என்ன குட்டீஸ் நீங்களும் இனி இப்படி செய்வீங்க தானே.

புதன்

கணக்கு & கையெழுத்து

"எண் 9 ன் மாயாஜாலம்
~~~~~~~~~~~~~~~~~
(9×0) + 1= 1
(9×1) + 2= 11
(9×12)+3=111
(9×123)+4= 1111
(9×1234)+5=11111
................................
................................

மேலும் முயற்சி செய்து பாருங்கள்

கையெழுத்துப் பயிற்சி - 7


இன்றைய செய்திகள்-24.07.2019

* கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிப்பு.

* ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் இனி ஆந்திர மக்களுக்கே: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி.

* இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு.

* இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெறுகிறார்.

* காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடரின் அனைத்து பிரிவிலும் அசத்திய இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 7 தங்கப் பதக்கங்களையும் வசப்படுத்தி சாதனை படைத்தனர்.

Today's Headlines

* From the dams of Karnataka water flows to   Metur Dam of Tamilnadu at the rate of 7,000 cc per second. Earlier it was only 1,500 cc/sec.

* In all the private organisations at Andhra 75% of posts goes to Andhra people only declared CM Mr. Jagan Mohan Reddy.

* The Conservative Party leader Mr. Boris Johnson is selected as the new Prime Minister of England.

* The leading fast bowler Mr. Malingkaa of Ceylon team gets retired after his play against Bangladesh on the first day itself.

* In Commonwealth table tennis match in all divisions Indian players both men and women rocked the competition by got 7 gold medals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments :

CLOSE ADS
CLOSE ADS