Friday, July 19, 2019
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு
பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.
இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் அனைத்தும் இலவசம்.மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விருப்ப கடிதத்தை அப்பள்ளி தலைைமையாசிரியர் பெறவேண்டும்.
ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என தேர்வு செய்து இம்மாதம் 22ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். டிசம்பர்8ம் தேதி தக்ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த சுவரொட்டியை பள்ளி தகவல் பலகையில் வைக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment