Wednesday, July 24, 2019

'தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அஞ்சல்துறை அறிவிப்பு!

No comments :

'தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அஞ்சல்துறை அறிவிப்பு!

தபால்தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ என்ற திட்டத்தின் கீழ், உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகள் நலனுக்காகவும், தபால்தலை சேகரிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசு கடந்த 2017 நவ. 3-ம் தேதி ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ என்ற நாடு தழுவிய உதவித் தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தபால்தலை சேகரிப்பு பழக்கம் மற்றும் அதுபற்றிய ஆராய்ச்சியை ஒரு பொழுதுபோக்காக கொள் வதை ஊக்குவிப்பதற்கான உதவித் தொகை வழங்கும் இத் திட்டத்தின் கீழ், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், நன் றாகப் படிப்பதுடன், தபால் தலை சேகரிப்பை ஒரு பொழுது போக்காகக் கொண்ட மாணவர் களுக்கு, ஆண்டுக்கு 6,000/- ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அஞ்சல் வட்டங்களிலும் போட்டித் தேர்வு கள் நடத்தப்பட உள்ளன. இந்த உதவித் தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிப்பவராக இருப்பதோடு, அந்தப் பள்ளியில் தபால்தலை சேகரிக்கும் மன்றம் இயங்குவதும், அந்த மன்றத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருப் பதும் அவசியம்.

தபால்தலை சேகரிப்பு மன்றம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தால், அவர் சொந்தமாக தபால்தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண் டும். 26-ம் தேதிக்கு முன்பாக... இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள அஞ்ச லகங்களில் வரும் 26-ம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கப் பட வேண்டும். விண்ணப்பப் படிவங்களை, www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை மாநகர வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஆர்.பி.சித்ரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments :

CLOSE ADS
CLOSE ADS