Thursday, July 18, 2019
அஞ்சல்துறை உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
அஞ்சல்துறை உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பள்ளி மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நிரஞ்சனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையேஊக்கு விக்கும் விதமாக தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா எனும் உத வித்தொகை திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
புதிதாக கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ரூ.200 செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு ஆக. 26ஆம் தேதி நடைபெறும். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர், மாணவிகள் அஞ்சல் தலை சேகரிப்பு செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர், மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம்ஓராண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment