Wednesday, July 24, 2019

தபால் துறை தேர்வு ரத்து ஏன்? ஐகோர்ட்டு கேள்வி

No comments :

தபால் துறை தேர்வு ரத்து ஏன்? ஐகோர்ட்டு கேள்வி

தபால் துறை தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விரிவான விளக்கமளிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்ததேர்வில் உள்ள கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. இதை எதிர்த்துதி.மு.க., எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா?, இருக்காதா? என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தபால் துறை சார்பில் 2 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், தபால்காரர் உள்ளிட்ட பணிக்கு பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளதே தவிர, பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று தெளிவாக கூறப்படவில்லை என்று கூறினர். மேலும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது? என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்தற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தபால் துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments :

CLOSE ADS
CLOSE ADS