Tuesday, July 23, 2019
B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு.இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019
B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு.இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 பொதுக்கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு. சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12-ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற் கல்வி (Vocational) பயின்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் இணையதள வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கும் நாள் 20.07.2019 இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019 விண்ண ப்பத் தொகை ரூ.500/- (தமிழ்நாட்டை சார்ந்த SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/- மட்டும்). இந்த தொகையை பற்று அட்டை , கடன் அட்டை மற்றும் இணையவழி வங்கி கணக்கு (Credit Card, Debit Card, Net Banking) வழியாக செலுத்த வேண்டும். கேட்பு வரைவோலையாக (Demand Draft) செலுத்த விரும்பும் "The Secretary, TNEA” payable at Chennai, on or after 19.7.2019 வரைவோலை பெற்று, அதை அருகாமையில் இயங்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TFC Center) உதவி மையத்தில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அசல் சான்றிதழ்கள் சரி பார்த்தல் மற்றும் துணை கலந்தாய்வு நேர்முகக் கலந்தாய்வாக, சென்னை தரமணியில் Central Polytechnic College (CPT) வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் மட்டுமே நடைபெறும். சான்றிதழ் சரி பார்ப்புக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவை e-call letter (can be downloaded by the candidatefrom thea portal - விண்ண ப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்) வழியாகவும் மற்றும் குறுஞ்செய்தியாகவும் (SMS-விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு) அனுப்பப்படும். துணை கலந்தாய்விற்குமுன் அசல் சான்றிதழ் சரி பார்ப்பிற்கு கலந்து கொள்ளாத மாணவர்கள், துணை கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். சரி பார்ப்பிற்கு எடுத்து வரவேண்டிய சான்றிதழ்கள் மற்றும் இது தொடர்பான ஏனைய விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tneaonline.in or https://www.tndte.gov.in என்ற இணையதள முகவரியை மட்டும் அணுகவும். ஏதாவது சந்தேகம் இருந்தால் தொலை பேசிஉதவி பெற 044-2235101411015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment